தமிழ் புத்தகங்கள் மதிப்புரை

தமிழ் புத்தகங்கள் மதிப்புரை

ஐந்தும் மூன்றும் ஒன்பது

ஐந்தும் மூன்றும் ஒன்பது

புத்தகத்தின் பெயர்: ஐந்தும் மூன்றும் ஒன்பதுஆசிரியர்: இந்திரா சௌந்தர்ராஜன்பக்கங்கள்: 392வகைமை: த்ரில்லர் / அமானுஷ்யம் “ஐந்தும் மூன்றும் ஒன்பது” என்பது இந்திரா சௌந்தர்ராஜன் அவர்களின் நீளமான த்ரில்லர் நாவல்களில் ஒன்று. அமானுஷ்ய அம்சங்களும், ஆராய்ச்சி சார்ந்த குறிப்புகளும் கலந்த இந்தக் கதை, ஆரம்பத்தில் சுவாரஸ்யமாக இருந்தாலும், முழுவதும் வாசிக்கும் போது சில இடங்களில் அயர்ச்சியையும் ஏற்படுத்துகிறது. இந்த நாவலில் கணபதி சுப்ரமணியன், பிரியா, வர்ஷன் வள்ளுவர், ஆனந்த கிருஷ்ணன், பத்மாசினி போன்ற பல கதாபாத்திரங்கள் முக்கிய பங்கு […]

ஐந்தும் மூன்றும் ஒன்பது Read More »

கிழவனும் கடலும்

கிழவனும் கடலும்

புத்தகத்தின் பெயர்: கிழவனும் கடலும்ஆசிரியர்: எர்னெஸ்ட் ஹெம்மிங்வேபக்கங்கள்: 144 “கிழவனும் கடலும்” என்பது மனித மனவலிமையையும், வாழ்க்கையின் சவால்களை எதிர்கொள்ளும் துணிவையும் மிக எளிமையாகவும் ஆழமாகவும் எடுத்துரைக்கும் ஒரு சிறந்த படைப்பு. இது நான் வாசித்த இரண்டாவது புத்தகம். இந்த நூலைப் பற்றி முன்பே சிலர் எழுதிய மதிப்புரைகளை பார்த்திருந்ததால், ஒரு எதிர்பார்ப்புடன் தமிழில் வாங்கி வாசித்தேன். வாசித்தபின், இதை நேரடியாக ஆங்கிலத்தில் படித்திருக்கலாம் என்ற எண்ணமும் தோன்றியது, ஏனெனில் தமிழாக்கம் சில இடங்களில் அதன் மூல

கிழவனும் கடலும் Read More »

பார்ப்பனியமும் இந்திய தேசிய உருவாக்கமும்

பார்ப்பனியமும் இந்திய தேசிய உருவாக்கமும்

புத்தகத்தின் பெயர்: பார்ப்பனியமும் இந்திய தேசிய உருவாக்கமும்ஆசிரியர்: தொ. பரமசிவன்பக்கங்கள்: 72வகைமை: சமூக / வரலாற்று ஆய்வு “பார்ப்பனியமும் இந்திய தேசிய உருவாக்கமும்” என்பது தொ. பரமசிவன் அவர்களின் ஆழமான சிந்தனைகளையும் வரலாற்றுப் பார்வைகளையும் கொண்ட ஒரு சிறிய ஆனால் தீவிரமான நூல். இந்த புத்தகத்தை வாசிக்கும் போது, கையில் ஒரு குறிப்பேடு இல்லாமல் படிப்பது கடினமாகவே தோன்றுகிறது; ஏனெனில் ஒவ்வொரு பக்கமும் புதிய தகவல்களையும் சிந்திக்க வைக்கும் கருத்துகளையும் வழங்குகிறது. இந்த நூலில், பார்ப்பனியம் எவ்வாறு

பார்ப்பனியமும் இந்திய தேசிய உருவாக்கமும் Read More »

ருசி

ருசி

புத்தகத்தின் பெயர்: ருசிஆசிரியர்: பிரபஞ்சன்பக்கங்கள்: 159வகைமை: சிறுகதைத் தொகுப்பு “ருசி” என்பது 15 சிறுகதைகளை கொண்ட ஒரு தொகுப்பு. ஒவ்வொரு கதையும் சுமார் 7 பக்கங்களில் இருந்து 15–20 பக்கங்கள் வரை நீளமானவை. முதலில் பார்க்கும் போது இவை சிறுகதைகள் என்பதால் விரைவாக வாசித்து முடிக்கலாம் என்று தோன்றினாலும், முழுவதும் வாசித்த பின் தான் இந்த எண்ணம் மாறுகிறது. இந்தத் தொகுப்பில் உள்ள கதைகள் அனைத்தும் ஒரு பக்கக் கதையைப் போல எளிய மையக் கருத்தை கொண்டிருந்தாலும்,

ருசி Read More »

நைலான் கயிறு

நைலான் கயிறு

புத்தகத்தின் தலைப்பு நைலான் கயிறு.  ஆசிரியர் சுஜாதா.  127 பக்கங்களைக் கொண்ட இந்த நாவலின் விலை 180 ரூபாய்.  இதுவரை நான் சுஜாதாவின் எட்டு நாவல்கள் படித்திருந்தேன்; இந்த நூல் எனது ஒன்பதாவது வாசிப்பு. முன்னுரையைப் படிக்கும் போது, இது கணேஷ் கதாபாத்திரத்தின் முதல் தோற்றம் என்பதை அறிந்தேன். வழக்கம்போல் கதை ஒரு கொலையைக் கொண்டு தொடங்குகிறது. ஆரம்பத்தில் அந்தக் கொலையின் காரணத்தை போலீஸ் தவறாக புரிந்து கொண்டு, நவநீதன் மீது குற்றம் சாட்டப்படுகிறது. அப்போது கணேஷ்

நைலான் கயிறு Read More »

அப்சரா

அப்சரா

புத்தக விமர்சனம் – அப்சரா | சுஜாதா புத்தகத்தின் பெயர் அப்சரா, 144 பக்கங்கள் கொண்ட இந்த நூலை எழுதியவர் சுஜாதா. இந்தப் புத்தகம் இரண்டு தனித்துவமான நாவல்களை உள்ளடக்கியது: அப்சரா மற்றும் மூன்று நாள் சொர்க்கம். இரண்டிலும் கதையின் போக்கும், கருப்பொருளும் முற்றிலும் வேறுபட்டிருந்தாலும், வாசகனை ஈர்க்கும் விதத்தில் எழுதப்பட்டுள்ளன. முதல் நாவலான அப்சரா, காரணம் தெரியாத தொடர்ச்சியான கொலைகளை மையமாகக் கொண்ட ஒரு சைக்காலஜிக்கல் திரில்லர். கதையில், ஒரு இளைஞன் எந்தத் தெளிவான காரணமும்

அப்சரா Read More »

கொலையுதிர் காலம்

கொலையுதிர் காலம்

புத்தகத்தின் பெயர்: கொலையுதிர் காலம்ஆசிரியர்: சுஜாதாபக்கங்கள்: 359வகைமை: த்ரில்லர் / அமானுஷ்யம் “கொலையுதிர் காலம்” நாவலை வாசிக்கும் போது, ஒரு விறுவிறுப்பான திரில்லர் திரைப்படம் பார்த்த உணர்வு கிடைக்கிறது. சுஜாதா தனது வழக்கமான பாணியில், physics, mathematics, law போன்ற பல துறைகளின் அறிவை கதையுடன் இயல்பாக இணைத்து, ஒரு அறிவார்ந்த மற்றும் சுவாரஸ்யமான அனுபவத்தை உருவாக்குகிறார். ஒரு எழுத்தாளருக்கு இவ்வளவு பரந்த அறிவும் கற்பனையும் இருக்க வேண்டுமென்று தோன்ற வைக்கும் படைப்பு இது. இந்தக் கதையில்

கொலையுதிர் காலம் Read More »

சிச்சு புறா

சிச்சு புறா

புத்தகத்தின் பெயர்: சிச்சு புறாஆசிரியர்: அல்காமொழி: மலையாளம்தமிழாக்கம்: சுகானாபக்கங்கள்: 64வகைமை: நாவல் / குழந்தைகள் இலக்கியம் “சிச்சு புறா” என்பது மிகவும் எளிமையானதோடு சிந்திக்க வைக்கும் ஒரு அழகான சிறுநாவல். இந்த நூலை எழுதியபோது ஆசிரியரின் வயது வெறும் 12 என்பதே இதன் மிகப்பெரிய ஆச்சரியம். மேலும், இந்த நூலுக்கு இயக்குனர் பாலு மகேந்திரா முன்னுரை எழுதியிருப்பது இதன் முக்கியத்துவத்தை மேலும் உயர்த்துகிறது. இந்தக் கதை குழந்தைகளுக்கு ஒரு சிறந்த bedtime story ஆக இருக்கும். கதையின்

சிச்சு புறா Read More »

உதடுகள் சுடும் & காகிதப் புலிகள்

உதடுகள் சுடும் & காகிதப் புலிகள்

புத்தகத்தின் பெயர்: உதடுகள் சுடும் & காகிதப் புலிகள்ஆசிரியர்: ராஜேஷ் குமார்பக்கங்கள்: 186 ராஜேஷ் குமார் எழுதிய இந்த புத்தகம் இரண்டு தனித்தனி கிரைம் நாவல்களை கொண்டுள்ளது. வழக்கம்போல், சுருக்கமான கதைநடை, எதிர்பாராத திருப்பங்கள், மற்றும் சுவாரஸ்யமான விசாரணை கோணங்கள் இந்த தொகுப்பிலும் தெளிவாக காணப்படுகின்றன. முதல் நாவல் “உதடுகள் சுடும்” ஒரு எளிய ஆனால் சுவாரஸ்யமான திருட்டு மற்றும் கடத்தல் கதையாக அமைந்துள்ளது. ஒரு பங்களா வீட்டின் முதலாளி, தன் புகைபிடிக்கும் பைப்பில் பாரம்பரிய வைரங்களை

உதடுகள் சுடும் & காகிதப் புலிகள் Read More »

இரண்டாவது தாலி

இரண்டாவது தாலி

புத்தகத்தின் பெயர்: இரண்டாவது தாலிஆசிரியர்: ராஜேஷ் குமார்பக்கங்கள்: 246 ராஜேஷ் குமார் எழுதிய “இரண்டாவது தாலி” நாவல், வழக்கமான அவரது த்ரில்லர் பாணியில், காதல், குடும்பம் மற்றும் எதிர்பாராத திருப்பங்கள் கலந்த ஒரு சுவாரஸ்யமான கதையாக அமைந்துள்ளது. கதையின் மையத்தில் சுபமதி, சுந்தரம், புவனேந்திரன், பன்னீர்செல்வம் மற்றும் ஷ்யாம் ஆகிய முக்கிய கதாபாத்திரங்கள் உள்ளனர். கதை கல்லூரி வாழ்க்கையிலிருந்து தொடங்குகிறது. கல்லூரி மாணவர்கள் ஆராய்ச்சி காரணமாக காட்டுப் பகுதிக்கு செல்லும் போது, அங்கே சுபமதி புவனேந்திரனை சந்தித்து

இரண்டாவது தாலி Read More »