புத்தகத்தின்பெயர்: தமிழ் நாட்டுப்புற இயல் ஆய்வுகள்

பக்கங்கள்: 216

ஆசிரியர்: பெ.சுப்பிரமணியன்

இந்த புத்தகத்தை படித்து முடிக்கும் போது இந்த சினிமாவின் அசுர வளர்ச்சிக்கு இந்த நாட்டுப்புற இயல்கள் எவ்வாறு இறையாயிருக்கிறது என்பதை சற்று கணத்த இதயத்துடனே நம்மால் உணர முடிகிறது. நாட்டுப்புற இயல்களின் அடிப்படையில்தான் சினிமா தோன்றினாலும் ஆனால் அதன் வளர்ச்சி மற்றும் மக்களின் உள்ளக் கிளிச்சியும் நம் முன்னோர்களின் இந்த கலைகளை மறந்து விடச் செய்கிறது என்பது கூடுதல் கசப்பு.

எவ்வாறு ஒவ்வொரு திரைப்படமும் புதுபுது பிளாட், தொழில்நுட்பத்துடன் வருகிறதோ அதே போல் நாட்டின் அரசாசங்களும் முன்னோர்களின் கலையை பறைசாற்ற பொருநை போன்ற அருங்காட்சியத்தை நிறுவுகின்றனரோ அத போல் கூடிய சீக்கிரத்தில் நாட்டுப்புற கலைகளும் அதன் சாராம்சமும் ஒரு குளுரூட்டப்பட்ட அறையில் புகைப்படங்கள் மற்றும் சிமுலேசன் போன்ற அமைப்புடன் உருவாகும் என்பது ஒரு நிதர்சனம்.

இந்த புத்தகத்தை படிக்க ஆரம்பிக்கும் முன். இந்த ஆசிரியரான பெ.சுப்பிரமணியன் அவர்களின் முன்னூட்டத்தை சற்று வாசித்து விட்டு புத்தகத்தின்னுள்ளே சென்றேன். அவ்வளவு இலகுவான உரைநடையை கொடுத்து நாட்டிப்புற இயல் ஆய்வுகள் பற்றி அவ்வளவு அழகாக நமக்கு படம் பிடித்துகாட்டிருக்கிறார்.

ஆசிரியரின் எழுத்துக்களை பார்க்கும் போது அவரது அனுபவம், மற்றவர்களுக்கு எளிதாகவே இருக்க வேண்டும் என்ற கருத்து அவர் ஆழ் மனதில் ஒரு ஆசிரியராக கண்டிப்பாக பதிவு செய்யப்பட்டிருக்கும்.

மேலும் நாட்டுப்புற அழகியல், பாடல் வகைகள், கதைகள். கதைகளின் அமைப்பு, காப்பியக் கூறுகள், மருத்துவம், மந்திரம், கைவினைக்கலைகள். பழனி முருகன், திருவிழாக்கள், இசை, இசைக் கருவிகள்’ கூத்துக்கள், ஆட்டக்கலைகள் கடைசியாக ஆசிரியர் எவ்வாறாக இந்த ஆய்வை மேற்கொண்டார் அவற்றின் Research techniques பற்றி விரைவாக கூறுகிறார்.மேலே சொல்லப்பட்ட அனைத்துக் கலைகளும் எந்த ஒரு அச்சி ஏடும் இன்றி தலைமுறை தலைமுறையாக செவி வழியாகவே மட்டுமே கடத்தப்பட்டிருக்கு என்பது சற்று பிரமிப்பாக இருக்கு. தமிழ் நாட்டு பாட நூல் கழகம் இதனை ஆவன படுத்தினால் எதிர் வரும் சந்ததிகளுக்கு பொதுச்சொத்து போல் இருக்கும்.

பழனி முருகன் மற்றும் கொங்கு நாட்டின் மக்களைப் பற்றி கூறும் போது நம்மை அந்த தேசத்திற்கு ஒரு Virtual tour க்கு எடுத்துச் சென்றிருக்கிறார் ஆசிரியர்.மருத்துவம் மற்றும் மந்திரம் பற்றி கூறும் போது சிறு வயதில் தேள் கடித்தால் பார்வை பார்க்க செல்லும் நினைவுகள் எல்லாம் நம் மனதில் ஒரு உராய்வை ஏற்படுத்துகிறது.மருத்துவம் இதில் நாம் கவனமாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன் அதையெல்லாம் முற்போக்காக நினைத்தல் கூடாது.திருவிழாக்களை கூறும் போது மிகுந்து சுவாரஷ்யமான நிகழ்வுகளை தெரிந்து கொள்ளலாம். இந்த மாதிரியான புத்தகங்களுக்கு நமது வீட்டில் நிச்சயம் ஒரு இடம் வேண்டும்.

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன