தமிழ் புத்தகங்கள் மதிப்புரை

தமிழ் புத்தகங்கள் மதிப்புரை

ஜந்து

ஜந்து

ஜந்து ஜந்து – ஒரு ஆழமான வாசிப்பு அனுபவம்பா. ராகவன் எழுதிய ஜந்து என்பது சாதாரணமாகப் படித்து முடித்துவிடக்கூடிய நாவல் அல்ல. அது வாசகனின் மனதுக்குள் மெதுவாக நுழைந்து, நீண்ட நேரம் அங்கே தங்கி விடும் ஒரு படைப்பு. மனிதன், அவனுடைய உள்ளுணர்வு, அடக்கி வைத்திருக்கும் வன்முறை, பயம், சமூக கட்டமைப்பு – இவற்றையெல்லாம் ஒரே நேரத்தில் ஆராயும் ஒரு தீவிர உளவியல் நாவல் இது. ஜந்துவில் வரும் சம்பவங்கள், கதாபாத்திரங்கள் அனைத்தும் நிஜ வாழ்க்கையிலிருந்து அதிக […]

ஜந்து Read More »

மேற்கில் ஒரு குற்றம்

மேற்கில் ஒரு குற்றம்

புத்தகத்தின் பெயர்: மேற்கில் ஒரு குற்றம்ஆசிரியர்: சுஜாதாவகைமை: திரில்லர்பக்கங்கள்: 101வெளியீடு: விசா பதிப்பகம் “மூன்று குற்றங்கள்” என்ற தொகுப்பில் இடம் பெற்றுள்ள இந்த நாவல், சுஜாதாவின் வழக்கமான வேகமான மற்றும் சுவாரஸ்யமான திரில்லர் பாணியை முழுமையாக வெளிப்படுத்தும் ஒரு சிறந்த படைப்பு. கதை, ஒரு பெண் கணேஷின் அலுவலகத்திற்கு வந்து உதவி கோரும் தருணத்தில் தொடங்குகிறது. அவள் விட்டுச் செல்லும் ஒரு காகிதத்தில் வரையப்பட்ட வட்டங்கள்—அதுவே கதையின் முக்கிய துருப்புச் சீட்டாக மாறுகிறது. அடுத்த நாளே அந்த

மேற்கில் ஒரு குற்றம் Read More »

அனிதா – இளம் மனைவி

அனிதா – இளம் மனைவி

புத்தகத்தின் பெயர்: அனிதா – இளம் மனைவிஆசிரியர்: சுஜாதாவகைமை: திரில்லர் 48வது புத்தகக் கண்காட்சிக்குப் பிறகு நான் வாசித்த முதல் நூல் இதுதான். வாங்கிய புத்தகங்கள் அனைத்தும் சுஜாதாவின்து என்பதால், இந்த நூலை ஒரு எதிர்பார்ப்புடன் எடுத்தேன்—அந்த எதிர்பார்ப்பை முழுமையாக நிறைவேற்றும் படைப்பாக இது அமைந்தது. 158 பக்கங்கள் கொண்ட இந்த நாவல், வெறும் இரண்டு மணி நேரங்களில் வாசித்து முடிக்க வைத்தது. அதற்குக் காரணம், கதையின் ஓட்டமும், சுஜாதாவின் எளிமையான மற்றும் ஈர்க்கும் எழுத்து நடை.

அனிதா – இளம் மனைவி Read More »

அதிசயம் அது ரகசியம்

அதிசயம் அது ரகசியம்

புத்தகத்தின் பெயர்: அதிசயம் அது ரகசியம்ஆசிரியர்: லட்சுமி பிரபாபக்கங்கள்: 326வகைமை: நாவல் / திரில்லர் / அமானுஷ்யம் “அதிசயம் அது ரகசியம்” என்ற இந்த நாவல், உணர்ச்சி, மர்மம், மற்றும் ஆன்மீகத் தளங்களின் கலவையாக அமைந்த ஒரு சுவாரஸ்யமான படைப்பு. கதை தொடங்குவது, தன் அப்பாவை இழந்த துயரத்தில் அழும் நாயகி வானதியின் மனநிலையிலிருந்து. அந்த தொடக்கமே வாசகரை உடனே கதைக்குள் இழுத்துச் செல்கிறது. வானதி, சத்யன், மற்றும் அவளது அப்பா நடேசன்—இவர்கள் மூவரும் பத்திரிக்கை உலகைச்

அதிசயம் அது ரகசியம் Read More »

நிழல்களால் உருவாக்கப்பட்டவன்

நிழல்களால் உருவாக்கப்பட்டவன்

புத்தகத்தின் பெயர்: நிழல்களால் உருவாக்கப்பட்டவன்கவிதாசிரியர்: சுஜித் ஜூவிபக்கங்கள்: 64வகைமை: கவிதை இது என் வாசிப்பு வாழ்க்கையில் நான் முதன்முறையாக படித்த கவிதைத் தொகுப்பு. பொதுவாக நாவல்கள் வாசிப்பதிலேயே பழகியிருந்த எனக்கு, இந்தக் கவிதை நூல் ஒரு புதிய அனுபவத்தை அளித்தது. ஆச்சரியமாக, கவிதைகள் வாசிப்பது மிகவும் சுவாரசியமாகவும் சிந்திக்க வைக்கும் வகையிலும் இருந்தது. இந்தத் தொகுப்பில் உள்ள கவிதைகள், எளிய சொற்களிலேயே ஆழமான உணர்வுகளை வெளிப்படுத்துகின்றன. காதல், நவீன வாழ்க்கை, தனிமை, நகைச்சுவை ஆகியவை அனைத்தும் கலந்த

நிழல்களால் உருவாக்கப்பட்டவன் Read More »

கை

கை

புத்தகத்தின் பெயர்: கைஆசிரியர்: சுஜாதாபக்கங்கள்: 65வகைமை: நாவல் சுஜாதாவின் “கை” என்ற இந்தச் சிறுநாவல், அவரது வழக்கமான த்ரில்லர் அல்லது விஞ்ஞான பாணியிலிருந்து விலகி, மனித மனத்தின் வேதனை மற்றும் வாழ்க்கையின் கொடூரமான திருப்பங்களை மிக நுணுக்கமாக பதிவு செய்கிறது. சிறிய அளவிலான புத்தகமாக இருந்தாலும், இது வாசகரின் மனதில் நீண்ட நேரம் தாக்கத்தை ஏற்படுத்தும் வலிமையான கதையாகும். இந்தக் கதையின் மையத்தில் சிவதம்பி என்ற ஏழை குடும்பத்தைச் சேர்ந்த, ஓவிய திறமை மிகுந்த மனிதர் இருக்கிறார்.

கை Read More »

இளமையில் கொல்

இளமையில் கொல்

புத்தகத்தின் பெயர்: இளமையில் கொல்பக்கங்கள் : 112ஆசிரியர்: சுஜாதா இந்த நாவலானது சுஜாதா அவர்களால் எண்பதுகளில் எழுதப்பட்டது. இந்தப் புத்தகம் இரண்டு குறுநாவல்களைக் கொண்டுள்ளது. முதலாவது இளமையில் கொல். இந்தக் கதையானது ஒரு நட்பின் பிணைப்பில் எழுதப்பட்டது ஆக இருக்கிறது. கதிர்வேலன் மற்றும் ரங்கராஜன் இவர்களுடைய நட்பைப் பற்றியே இங்கு பெரும்பாலும் பேசப்பட்டுள்ளது. செய்யாத தப்பிற்கு கதிர்வேலனுக்கு எதிராக ரங்கராஜன் சொல்லும் பொய் சாட்சியானது கதிர்வேலனை மிகவும் வருத்தப்பட வைக்கிறது. இதனால் அவனுக்கு காவல் நிலையத்தில் நிறைய

இளமையில் கொல் Read More »

எமோஷனல் இன்டெலிஜென்ஸ் 2.0

எமோஷனல் இன்டெலிஜென்ஸ் 2.0

புத்தகத்தின் பெயர்: எமோஷனல் இன்டெலிஜென்ஸ் 2.0ஆசிரியர்: சோம வள்ளியப்பன்பக்கங்கள்: 213வகைமை: சுய முன்னேற்றம் / உளவியல் “எமோஷனல் இன்டெலிஜென்ஸ் 2.0” என்பது நம்முடைய உணர்வுகளை எவ்வாறு புரிந்து கொண்டு, சரியாக கையாள்வது என்பதை மிகவும் எளிமையாகவும் தாக்கமுள்ளதாகவும் விளக்கும் ஒரு பயனுள்ள நூல். வாசிக்க ஆரம்பித்தவுடன் ஈர்க்கும் இந்த புத்தகம், உள்ளடக்கத்திலும் அதே அளவு வசீகரத்தைக் கொண்டுள்ளது. இந்த நூலின் முதல் பகுதி உணர்வுகளின் எதிர்மறை விளைவுகளை எடுத்துரைக்கிறது; பின்னர் அதே உணர்வுகளை நேர்மறையாக மாற்றிக் கொள்ளும்

எமோஷனல் இன்டெலிஜென்ஸ் 2.0 Read More »

do it today

Do It Today

Book Title: Do It TodayAuthor: Darius ForouxPages: 140Genre: Self-help / Productivity “Do It Today” என்பது காலம் தாழ்த்தும் பழக்கத்தை (Procrastination) வெல்ல உதவும் ஒரு எளிமையான மற்றும் நடைமுறை சார்ந்த சுய முன்னேற்ற நூல். இதற்கு முன் Brian Tracy எழுதிய Eat That Frog போன்ற புத்தகங்களை வாசித்த அனுபவம் இருந்தால், இந்த நூல் இன்னும் எளிதாகப் புரியும். இந்த புத்தகத்தின் முக்கிய பலம் அதன் எளிமையான மொழி மற்றும்

Do It Today Read More »

அதிரா அபார்ட்மெண்ட் – பிளாட் நம்பர் 144 (பாகம் 1)

அதிரா அபார்ட்மெண்ட் – பிளாட் நம்பர் 144 (பாகம் 1)

புத்தகத்தின் பெயர்: அதிரா அபார்ட்மெண்ட் – பிளாட் நம்பர் 144 (பாகம் 1)ஆசிரியர்: ராஜேஷ் குமார்பக்கங்கள்: 216வகைமை: த்ரில்லர் / கிரைம் / அமானுஷ்யம் “அதிரா அபார்ட்மெண்ட் – பிளாட் நம்பர் 144” நாவல், ராஜேஷ் குமார் பாணியில் விறுவிறுப்பாக நகரும் ஒரு சுவாரஸ்யமான த்ரில்லர். ஆரம்பத்திலேயே ஒரு சாதாரண கார் திருட்டு வழக்காக தோன்றும் சம்பவம், மெதுவாக ஒரு கொலை மர்மமாக மாறுகிறது. காவல் ஆய்வாளர் சந்திரசூடன் மற்றும் அவரது நண்பர் கங்காதரன் இந்த வழக்கை

அதிரா அபார்ட்மெண்ட் – பிளாட் நம்பர் 144 (பாகம் 1) Read More »