தமிழ் புத்தகங்கள் மதிப்புரை

தமிழ் புத்தகங்கள் மதிப்புரை

ரெண்டு

இரண்டு

புத்தகத்தின் பெயர்: இரண்டு ஆசிரியர்: பா. ராகவன் பக்கங்கள்: 166 வகைமை: நாவல் 🔍 அறிமுகம் பா. ராகவன் எழுதிய “இரண்டு” நாவல், வழக்கமான கதைக்களங்களைத் தாண்டி, மிகவும் வித்தியாசமான மற்றும் சிந்திக்கத் தூண்டும் ஒரு படைப்பாகும். இந்த நாவலை முழுமையாக ஃபிக்ஷன் அல்லது நான்-ஃபிக்ஷன் என வகைப்படுத்துவது சற்று கடினம். இந்தப் புத்தகம் மனித உறவுகள், சமூகப் பார்வை, மற்றும் உளவியல் மாற்றங்களை ஆழமாக ஆராய்கிறது. 🧠 கதையின் மையக்கரு இந்தக் கதையின் முக்கிய கரு […]

இரண்டு Read More »

stillness speaks

Stillness Speaks

புத்தகத்தின் பெயர்: Stillness Speaks பக்கங்கள்: 128 ஆசிரியர்: Eckhart இந்தப் புத்தகத்திற்கு மதிப்புரை எழுதுவதற்கு முன், நான் ஏற்கனவே அறிந்த சில விஷயங்களைச் சொல்ல விரும்புகிறேன். “React to nothing” என்ற கருத்து புதிதானது அல்ல. நம்மில் பலரும் நம் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த உதவும் புத்தகங்களைத் தேடி வாசித்திருப்போம். Emotional Intelligence குறித்த பல புத்தகங்கள் ஆங்கிலத்திலும், தமிழிலும் மொழிபெயர்ப்பாகவும், தமிழ் ஆசிரியர்களால் எழுதப்பட்டதாகவும் கிடைக்கின்றன. இருந்தாலும், ஒரு குறிப்பிட்ட நூலை (அல்லது சொல்லப்போனால், ஒரு

Stillness Speaks Read More »

பலவீனமான இதயம்

பலவீனமான இதயம்

பலவீனமான இதயம் என்ற கவிதைத் தொகுப்பை எழுதியவர் க்ரிஷ் பாலா (பா. பாலகிருஷ்ணன்). Gen Z தலைமுறையைச் சேர்ந்த எழுத்தாளராக இவர் தன்னை அடையாளப்படுத்துகிறார். புத்தகத்தின் அணிந்துரை மற்றும் வாழ்த்துரைகளை வாசிக்கும் போது, அவருக்கு இலக்கிய உலகில் ஒரு வலுவான ஆதரவு வட்டம் இருப்பது தெரிகிறது. மொத்தம் 66 கவிதைகள் 104 பக்கங்களில் இடம் பெற்றுள்ளன.  குறுங்கவிதை வடிவில் அமைந்துள்ள இந்தத் தொகுப்பு, எளிய சொற்களால் ஆழமான உணர்வுகளை வெளிப்படுத்துகிறது. இந்தக் கவிதைகளில் பல வாசித்தவுடன் மனதில்

பலவீனமான இதயம் Read More »

விரதங்களின் மகிமை

விரதங்களின் மகிமை

கலைமாமணி கே.பி. அறிவானந்தம் எழுதிய இந்தப் புத்தகம் இந்து மதத்தின் அற வழியில் நிலைபெற்ற பக்தியின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒரு சிறந்த நூலாகும். பக்தி, வழிபாடு மற்றும் ஆன்மீக பாரம்பரியம் ஆகியவற்றை எளிய முறையில் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தும் நோக்கத்துடன் ஆசிரியர் இந்த நூலை எழுதியுள்ளார். இதில் பல சுவாரஸ்யமான மற்றும் பயனுள்ள தகவல்கள் விரிவாக இடம்பெற்றுள்ளன. இந்த நூலில் பிள்ளையார், முருகன், அம்பிகை, சிவன் போன்ற இந்து மதத்தின் முக்கிய தெய்வங்களின் பெயர்க்காரணங்கள் குறித்து ஆசிரியர் தெளிவாக

விரதங்களின் மகிமை Read More »

பெத்தவன்

பெத்தவன்

பெத்தவன் – ஒரு நெருடலான வாசிப்பு அனுபவம் சின்ன புத்தகமாக இருந்தாலும், ஆசிரியர் இமயம் தனது ஆழமான கதை சொல்லும் பாணியால் சாதிய அடக்குமுறையின் கொடூர முகத்தை இந்த நாவலில் தெளிவாகப் பதிவு செய்கிறார். அவரது எழுத்து எளிமையாக இருந்தாலும் தாக்கம் மிகுந்தது. கதையின் மாந்தர்கள் பேசும் தருணங்களில்தான் கதையின் உண்மையான ஓட்டம் நமக்குப் புரிகிறது. உரையாடல்கள் மூலம் கதாபாத்திரங்களின் உள்ளுணர்வுகளும், சமூகத்தின் அழுத்தங்களும் வெளிப்படுகின்றன. குடும்ப உறவுகள், ஆணவக் கொலை, ஊராட்சி கட்டுப்பாடு, தற்கொலை போன்ற

பெத்தவன் Read More »

குழந்தைகள் சைக்காலஜி

குழந்தைகள் சைக்காலஜி

144 பக்கங்களை கொண்ட இந்த புத்தகம், கிட்டத்தட்ட ஒட்டுமொத்த மனித இனத்தின் குழந்தை வளர்ப்பு முறைகளை, இக்காலத்திற்கு ஏற்ப மனித வாழ்க்கையின் எல்லா நெளிவு-கழிவுகளையும் ஆராய்ந்து திறம்பட விளக்கியுள்ளது. இந்த புத்தகத்தின் முதல் பதிப்பு (First Edition) ஜூன் 2008. இதில் ஆசிரியரின் முன்னஞ்சல் முகவரி மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதைத் தவிர ஆசிரியர் பற்றி எந்தவிதமான முன்னுரை அல்லது தகவலும் இல்லை. இதனால் ஆசிரியர் ஒரு மருத்துவரா, அல்லது சைக்காலஜி படித்த ஒரு தொழில்முறை நிபுணரா என்பதில்

குழந்தைகள் சைக்காலஜி Read More »

வேலைக்காரி

வேலைக்காரி

“ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்ற மனிதநேயக் கோட்பாட்டை தாங்கி நிற்கும் வேலைக்காரி நாடகம், தமிழ் சமூக சிந்தனையின் முக்கிய ஆவணமாக திகழ்கிறது. அண்ணாவின் அரசியல் மற்றும் சமூக பார்வை இலக்கிய வடிவம் எடுத்திருக்கும் சிறந்த எடுத்துக்காட்டாக இந்த படைப்பு பார்க்கப்படுகிறது. தலைப்பு வேலைக்காரி என்றாலும், ஆனந்தன் என்ற கதாபாத்திரமே கதை நகர்வின் மையமாக திகழ்கிறது. அவரது சிந்தனை மாற்றம், உரையாடல்களின் தீவிரம், சமூக அக்கறை ஆகியவை நாடகத்தின் கருத்தை வலுப்படுத்துகின்றன. இந்த நாடகம் ஜாதி வேறுபாடு,

வேலைக்காரி Read More »

gen z தலைமுறை

Gen Z தலைமுறை

Gen Z தலைமுறையை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட இந்த நூல், நாம் அன்றாடம் சமூக வலைதளங்களில் பார்க்கும் ரீல்ஸ், வீடியோக்கள் போன்றவற்றின் பின்னணியில் இருக்கும் உண்மையான காரணங்களை விரிவாக எடுத்துரைக்கிறது. பொதுவாக நாம் அந்த தலைமுறையினரை கேலியாகப் பேசுவோம். சில நேரங்களில் அவர்களின் செயல்களை வேடிக்கையாகவும், சில சமயங்களில் பொறாமையுடனும் பார்த்திருப்போம். ஆனால் அந்த Gen Z தலைமுறை சமூகத்தில் ஏற்படுத்தியிருக்கும் பெரும் மாற்றங்களையும், அவர்கள் கொண்டு வந்த சமூகப் புரட்சியையும் இந்த நூல் மிக அழுத்தமாகவும்,

Gen Z தலைமுறை Read More »

மயல்

மயல்

மயல் – Romantic Fantasy and Erotic Thriller ஜானர் பிரிவில் வரும் இந்த நாவல் கண்டிப்பாக படித்து முடித்தவுடன் நம் மனதில் மைய்யல் கொள்ளும், அதில் எந்த சந்தேகமும் வேண்டாம். இந்த கதையில் வரும் காட்டு வழி பாதை ஆகட்டும், இல்லை கதாபாத்திரங்களுக்கு இடையே வரும் காதல் மற்றும் கூடலாக இருக்கட்டும், நமக்கு ஒரு அபூர்வமான ரோலர் கோஸ்டர் உணர்ச்சி கண்டிப்பாக கொடுக்கும். பக்கங்கள்: 263 வெளியீடு: ஜீரோ டிகிரி எழுத்தாளர் சிவராமன் அவர்களுக்கு இது

மயல் Read More »

தடயம்

தடயம்

நாம் புதிதாக ஏதாவது கற்றுக்கொள்ளும் போது, மூளையில் உள்ள neurons (நரம்பு செல்கள்) ஒன்றோட ஒன்று புதிய connections (synapses) உருவாக்கி, ஒரு “neural network” அமைப்பை உருவாக்கும் என கூறுகின்றனர். அந்த அளவுக்கு, இந்தப் புத்தகத்தைப் படித்து முடிக்கும் நேரத்தில், நம் மூளையில் ஒரு compulsive neural network கண்டிப்பாக உருவாகும் என நான் நம்புகிறேன். இன்றைய காலகட்டத்தில் பொது மக்கள் தங்களுடைய உணர்ச்சிகளை செம்மை படுத்த முடியாமல், தங்களின் மூளையில் தொடர்ச்சியாக சில தலைப்புகளை

தடயம் Read More »