Book Review

gen z தலைமுறை

Gen Z தலைமுறை

Gen Z தலைமுறையை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட இந்த நூல், நாம் அன்றாடம் சமூக வலைதளங்களில் பார்க்கும் ரீல்ஸ், வீடியோக்கள் போன்றவற்றின் பின்னணியில் இருக்கும் உண்மையான காரணங்களை விரிவாக எடுத்துரைக்கிறது. பொதுவாக நாம் அந்த தலைமுறையினரை கேலியாகப் பேசுவோம். சில நேரங்களில் அவர்களின் செயல்களை வேடிக்கையாகவும், சில சமயங்களில் பொறாமையுடனும் பார்த்திருப்போம். ஆனால் அந்த Gen Z தலைமுறை சமூகத்தில் ஏற்படுத்தியிருக்கும் பெரும் மாற்றங்களையும், அவர்கள் கொண்டு வந்த சமூகப் புரட்சியையும் இந்த நூல் மிக அழுத்தமாகவும், […]

Gen Z தலைமுறை Read More »

மயல்

மயல்

மயல் – Romantic Fantasy and Erotic Thriller ஜானர் பிரிவில் வரும் இந்த நாவல் கண்டிப்பாக படித்து முடித்தவுடன் நம் மனதில் மைய்யல் கொள்ளும், அதில் எந்த சந்தேகமும் வேண்டாம். இந்த கதையில் வரும் காட்டு வழி பாதை ஆகட்டும், இல்லை கதாபாத்திரங்களுக்கு இடையே வரும் காதல் மற்றும் கூடலாக இருக்கட்டும், நமக்கு ஒரு அபூர்வமான ரோலர் கோஸ்டர் உணர்ச்சி கண்டிப்பாக கொடுக்கும். பக்கங்கள்: 263 வெளியீடு: ஜீரோ டிகிரி எழுத்தாளர் சிவராமன் அவர்களுக்கு இது

மயல் Read More »

தடயம்

தடயம்

நாம் புதிதாக ஏதாவது கற்றுக்கொள்ளும் போது, மூளையில் உள்ள neurons (நரம்பு செல்கள்) ஒன்றோட ஒன்று புதிய connections (synapses) உருவாக்கி, ஒரு “neural network” அமைப்பை உருவாக்கும் என கூறுகின்றனர். அந்த அளவுக்கு, இந்தப் புத்தகத்தைப் படித்து முடிக்கும் நேரத்தில், நம் மூளையில் ஒரு compulsive neural network கண்டிப்பாக உருவாகும் என நான் நம்புகிறேன். இன்றைய காலகட்டத்தில் பொது மக்கள் தங்களுடைய உணர்ச்சிகளை செம்மை படுத்த முடியாமல், தங்களின் மூளையில் தொடர்ச்சியாக சில தலைப்புகளை

தடயம் Read More »

காஞ்சனை

காஞ்சனை

இதற்கு முன் நான் உயரமாக நினைத்த எழுத்தாளர்கள் அனைவரும், இந்த நூலை வாசித்த பிறகு எனக்குள் பாகுபலி படத்தில் வரும் அந்தக் காட்சியை நினைவூட்டினர்  பல்வாள் தேவனின் சிலைக்குப் பின்னால் உயர்ந்து நிற்கும் பாகுபலி சிலை போல  புதுமைப்பித்தனும் என் சிந்தனையில் எழுந்து நின்றார். புத்தகத்தின் பக்கங்கள்: 160 வெளியீடு: மலர் புக்ஸ் இதுதான் நான் படிக்கும் முதல் புதுமைப்பித்தன் புத்தகம். இதுவரை சுஜாதா, ராஜேஷ்குமார் போன்ற எழுத்தாளர்களின் நாவல்களைப் படித்து வந்த எனக்கு, இந்த நூல்

காஞ்சனை Read More »

சீமானின் திருமணம்

சீமானின் திருமணம்

இந்த மொழிபெயர்ப்பு நூலானது ரஷியன் எழுத்தாளர் இவான் துர்நெவ் எழுதிய பிரசித்திபெற்ற நாவல் ஆஸ்யா. இந்த நாவல் முதலில் 1857ஆம் ஆண்டு வெளிவந்தது, அக்காலத்தில் ரஷ்ய இலக்கிய உலகில் பெரும் வரவேற்பைப் பெற்ற படைப்பாகும். இதனை “சீமானின் திருமணம்” என்று தமிழில் மொழிபெயர்த்தவர் ந. பாஸ்கரன். பக்கங்கள்: 79 வெளியீடு: பரிசில் முதல் பதிப்பு: டிசம்பர் 2025 இதன் வகை: மொழிபெயர்ப்பு அல்லது புனைவு இந்த நாவலில் ஆசிரியர் அவர்கள் ஒரு 25 வயது பணக்கார இளைஞனின்

சீமானின் திருமணம் Read More »

வெண்ணிற இரவுகள்

வெண்ணிற இரவுகள்

பக்கங்கள்: 104 ஆசிரியர்: பியோதார் தஸ்தயேவஸ்கி திரைப்படமாக இருந்தாலும் சரி அல்லது ஒரு எழுத்து வடிவமாக இருந்தாலும் சரி பெண்களோ, ஆண்களோ தனது சோக உணர்ச்சியை மறைத்து அதை அழகாக வேறு வடிவத்தில் வெளிக்காட்டி முயல்வதும் அவ்வாறாக முயல்வதில் தோல்வி அடைவதையும் படம் பிடித்து அல்லது தன் எழுத்து வடிவத்தில் கொண்டு வருவது சற்று கடினமான விஷயம் தான். ஆனால் இதில் ஆசிரியர் அந்த கணங்களை மிக அழகாக கடத்தி அந்த உணர்வை நம்மில் உறுதி செய்கிறார்.

வெண்ணிற இரவுகள் Read More »

நீங்கள் சிந்திக்கின்ற அனைத்தையும் நம்பிவிடாதீர்கள்

நீங்கள் சிந்திக்கின்ற அனைத்தையும் நம்பிவிடாதீர்கள்

“நீங்கள் சிந்திக்கின்ற அனைத்தையும் நம்பிவிடாதீர்கள்” — இந்த ஒரு வரியே இந்த புத்தகத்தின் மையம். படிக்கத் தொடங்கும் முன்பே அது நம்மை சற்றே தடுக்கச் செய்கிறது. சிந்திக்காமல் மனிதன் வாழ முடியுமா? என்ற கேள்வி உடனே மனதில் எழுகிறது. ஆனால் அதுவே இந்த புத்தகத்தின் முதல் வெற்றி. Don’t Believe Everything You Think என்ற இந்த நூல், ஜோசப் நுயென் எழுதிய 163 பக்கங்களிலேயே, மனித மனதின் பழக்கப்பட்ட சிந்தனைச் சுழற்சியை மெதுவாக உடைத்து விடுகிறது.

நீங்கள் சிந்திக்கின்ற அனைத்தையும் நம்பிவிடாதீர்கள் Read More »

தவ்வை

தவ்வை

“தவ்வை” என்னும் சொல், சில பகுதிகளில் பெண் காவல் தெய்வம் என்ற பொருளை வழங்குகிறது. காவல் தெய்வம் என்றால், உக்கிரமான வடிவத்தில், ஆயுதங்களுடன் எதிரிகளை எதிர்த்து நம்மை பாதுகாக்கும் சக்தியின் உருவமாக நாம் நினைக்கிறோம். ஆனால் இந்த நாவலில் வருகிற தவ்வை என்ற பெண், அத்தகைய தெய்வமாக அல்ல; இந்தியா போன்ற நாடுகளில், ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருத்தியாக இருந்துகொண்டிக்கிற பெண்களாக, அமைதியான காவல் சக்தியாக எழுத்தாளரால் வடிவமைக்கப்பட்டிருக்கிறார். ஆசிரியர்: அகிலா பாக்கங்கள்: 206 வெளியீடு: Discovery Book

தவ்வை Read More »