புத்தகத்தின்பெயர்: என் தந்தையைக் கொன்றவர் யார்

பக்கங்கள்: 79

ஆசிரியர்: எதுவார் லூயி

மொழி பெயர்ப்பாளர்: எஸ்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி

வகைமை: மொழிபெயர்ப்பு, உலக இலக்கியம்

இந்த புத்தகத்தின் விமர்சனத்திற்கு செல்லும் முன் மொழிப்பெயர்ப்பு மொழிப்பெயர்ப்புவந்தி சுருக்கமாக காண்கலாம்.

மொழிப்பெயர்ப்பாளர் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் மொழிப்பெயர்ப்புக்காக பல உயரிய விருதுகளை வாங்கிருக்கிறார் என முன்னுரையில் தெரியபடுத்துள்ளது அதே போல் இந்த புத்தகத்திலும் தனது பங்கை கச்சிதமாக செய்திருக்கிறார் என சொல்லலாம் இருந்தாலும் இந்த நூலில் வரும் சில கதைகளின் வாக்கிய அமைப்புகள் படிப்பதற்கு சற்று அயற்சியை தருகிறது.  

இந்த புத்தகத்தின் கருவை எடுத்துக் கொண்டோமானால் தந்தைக்கும் அவரது புத்திரர்களுக்கும் நடக்கும் உணர்வுப் போராட்டங்களை பதிவு செய்துள்ளார். ஒவ்வொரு கதையுமே நம் வாழ்வோடு ஒத்து போகத்தான் செய்கிறது கதைக்களத்தின் பிராந்தியம் வேறாக இருந்தாலும் உணர்வு என்பது பொது தானே அந்த வகையில் இந்த புத்தகம் நமக்கு ஏகோபித்த உணர்ச்சிகளையே நமக்கு அளிக்கின்றன.

தந்தைக்கும் மகனுக்கும் நடக்க கூடிய பாசப் போராட்டம், தந்தை மகனை கண்டிப்பதும் ஒரு சில நேரங்களில் மகன் தன் தந்தையின் மீது கை வைப்பதும். தாய் தன் கணவனை சற்று தள்ளி வைத்து விட்டு தனது மகனுக்கு சலுகை அளிப்பது என நம் நாட்டில் நடக்கும் விஷயங்களை கூட அருமையாக காட்டியுள்ளார். இந்த புத்தகத்தை படிக்கும் போது அது நமக்கு ஒரு நாட்குறிப்பை படிப்பது போல உணர்வையே தருகிறது காரணம் ஆசிரியரின் எழுத்து நடையா அல்லது மொழிபெயர்ப்பா என்று சரியாக தெரியவில்லை.

ஆசிரியர் அங்கே Franceல் நடக்கு அரசியல் சுழலையும் அது எவ்வாறாக ஒரு சாமானியனை பாதிக்கிறது என தெளிவாக எடுத்துரைத்துள்ளார். ஒரு பக்கத்தில் அரசியல்வாதிகளுக்கு மக்கள் நலத்திட்டங்களை மாற்றம் செய்யும் போது போட்டி மற்றும் வேடிக்கைக்காக மாற்றி அமைக்கின்றனர் ஆனால் அந்நாட்டில் உள் ஏழை எளிய குடும்பங்களுக்கு வாழ்வா சாவா என்றநிலையேதருகின்றனர்.

ஆசிரியர் நிறைந்த சமூக சிக்கல்களையும் இணைத்து எழுதியுள்ளார் உதாரணமாக அவர் ஒரு மகனை பெண் பாலோடு ஒற்றி எழுதியிருப்பது ஆசிரியரின் சமூக பொறுப்பை காண்பிக்கிறது.

நமக்கு போதுமான பொறுமை இருக்குமேயானால் இந்த புத்தகத்தை தேர்வு செய்து படிக்கலாம்.

ஒரே stretchல் படித்து முடிப்பது நலம். பக்கங்கள் குறைவாக இருப்பது ஒரு பலம் என்றே சொல்லலாம். கொஞ்சம் இடைவேளி விட்டு படிக்கோம் என்றால் அயற்சி கிட்டுவது நிச்சயம். 

ஆனால்இந்தபுத்தகம் ஒரு தந்தை மகன் இருவருக்கிடையே இருக்கும் மனப் போரட்டங்களை ஆழமாக பதிவுசெய்கிறது. புத்தகத்தை படித்து மூடிய பின் தந்தையின் தியாகம் மட்டும் நம் நினைவுகளில் ஒட்டிக் கொள்கிறது.

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன