புத்தகத்தின்பெயர்: பட்டு

ஆசிரியர்: Alessandro Baricco

பக்கங்கள்: 125

வகைமை: மொழிபெயர்ப்பு/நாவல்/புதினம்

தகத்தின்பெயர்: பட்டு
ஆசிரியர்: Alessandro Baricco
பக்கங்கள்: 125
வகைமை: மொழிபெயர்ப்பு/நாவல்/புதினம்
மொழிப்பெயர்ப்பாளர்: சுகுமாரன்

காலச்சுவட்டின் மற்றொமொரு படைப்பு இந்த பட்டு, ஒரு இத்தாலிய நாவல், வெளியான ஆண்டு 1996. வெவ்வேறு பிராந்தியத்தில் திரைப்படமாகவும், மேடை நாடகமாகவும் வடிவம் எடுத்துள்ளது.

மொழிப்பெயர்பாளர் சுகுமாரனை தவிர்த்து விட்டு இந்த புத்தகத்தின் விமர்சனத்தை எழுதுவது என்பது சற்று கடினம் தான்.

நாம் இத்தாலி மொழியின் இக்கதையை படிக்க இயலாது ஆனால் படித்தால் மட்டுமே புத்தகத்தின் வரும் சொல்லாடல்கள் யாரிடம் இருந்து வந்தது என்பது தெரியும். சில சொற்றொடர்களை இந்த விமர்சனத்தின் இறுதி பகுதியில் படிக்கலாம்.

இந்தக்கதை 18 ஆம் நூற்றாண்டில் ஒரு பதட்டமான, இறுக்கமான போர் சூழ்நிலையில் எழுதப்பட்டுள்ளது. ஜப்பான் மற்றும் ஐரோப்பாவில் நடக்கும் போரின் நடுவில் “ஹெர்வே ஜான்கர்” இந்தக் கதையின் நாயகன் எவ்வாறு தமது பட்டு வியாபாரம் அதற்குரிய மூலப் பொருட்களான பட்டுபுழுக்களை எவ்வாறு கடல் தாண்டி ஜப்பானிலிருந்து தனது சொந்த நகரமான பிரான்சில் உள்ள லாவில்லேடியூ க்கு பல மாதங்கள் செலவழித்து கடல், பாலைவனம்,ஆற்றங்கரை, குதிரைப் பயணம் மேற்கொள்கிறான்.

சரி, இந்தக் கதை தலைப்பிற்கேற்ப பட்டின் வியாபார நுணுக்கங்களை பற்றியதா என்று கேட்டால் நிச்சயமாக இல்லை. கடத்தல்காரர்களின் உதவியோடு நாயகன் கடல் தாண்டி செல்வதனால் இது அப்போதயை காலக்கட்டத்தின் போர் அவற்றின் விளைவுகளை பற்றி பேசுமா என்று கேட்டால் கூட நிச்சயமாக இல்லை என்று சொல்லலாம்.

சில இடங்களில் ஆங்கிலேயர்களின் போர் தந்திரங்களை சிறு பொறுப்பு துறப்பு கூட இல்லாமல் கன்னத்தை வருடுவதுபோல் ஓங்கி அறைந்து செல்கிறார் ஆசிரியர், ஆங்கிலேயர்களின் மெலனின் நிறமி (melanin Pigments) சத்துக்கள் அதிகமுள்ள காரணத்தினால், அவர்களின் கன்னங்கள் மிக அதிகமாக சிவந்திருக்கும் என்று நம்புகிறேன்.

இந்த நாவலானது ஹெர்வே ஜான்கர் என்ற நாயகனின் மனதின் நுன்னிய இயக்கங்களை பற்றி பேசுகிறது. அது மட்டும் இல்லாமல் மேலே கூறிய அனைத்து சுழலையும் தெளிவாக உயிரோட்டமாக நமக்கு தனது எழுத்துகளின் மூலம்
கடத்துகிறார் Alessandro.

நாயகன் ஒரு Introvert
தனது தொழிலில் அசாத்தியமான திறமை உள்ளவன்

இருப்பினும் தன் மனைவி ஹெலனின் காதல், கடல் தாண்டி செல்லும் இடத்தில் ஒரு திட்டமில்லாமல் வரும் இளம் பெண்ணோடு காதல் என ஒரே loop ல் சென்று கதை முடிகிறது.

காதல் மற்றும் காமத்தை மையபடுத்தி எழுதியிருந்தாலும் கூட காதலை நாயகனின் செயல்பாட்டின் மூலமும் காமத்தை இரு பக்கங்களில் கூறி முடித்து விடுகிறார்.

இப்போது நான் ஒரு முறை வாக்கியத்தை படித்தபின் விரும்பியே சென்று திரும்பவும் பின் சென்று பக்கங்களை புரட்டி அதே வாக்கியங்களை படித்த சிலவற்றை இங்கே குறிப்பிடுகிறேன்.

அந்தக் காலகட்டத்தில் ஜப்பான் எல்லாறு மற்ற நாடுகளிடமிருந்து தனித்து இருந்தது என்று சொல்லும் போது

“சொந்தப் பகுத்தறிவைப் பின் தொடரும் தர்க்கத்தைத் தவிர குடியேற்றத்துக்குத் தடையாக எந்தச் சட்டமும் இருக்கவில்லை இருந்தாலும், திரும்பப் போக முயல்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்ப்பட்டது”

ஹெர்வே ஜான்கர் குணாதியங்களை கூறும் போது

“தனிமை அவனை ஆக்கிரமிக்கும் போது கல்லறைக்குச் சென்று ஹெலனுடன் பேசுவான். சோகத்தைத் தள்ளிவைப்பதில் வெற்றிகண்ட சில பழக்கங்கள் அவனுடைய எஞ்சிய பொழுதை கைப்பற்றியிருந்தன”

“ஏமாற்றம் அபரிமிதமானதாக இருந்தாலும் அதில், அவன் பங்கு இல்லை என்ற காரணத்தால் வாழ்க்கையில் எஞ்சியிருந்தவற்றில் கவனம் செலுத்தினான். புயலுக்குப் பிந்தைய காலையில் அசைக்க முடியாத பிடிவாதத்துடன் வேலைக்கு திரும்பும் தோட்டக்காரனைப் போல மீண்டும் ஒரு முறை வாழ்க்கைக்கு அதற்கிரிய கவனத்தைக் கொடுக்க ஆரம்பித்தான்.”

“தங்களுக்குள்ளேயே அமைதி காண்பவர்களுக்குரிய குலைக்க முடியாத அமைதி அவனிடம் இருந்தது”

இந்த நாவலை அதன் தாய் மொழியில் படிக்கும் போது இன்னும் நம் இதயத்தை தொடும் என்பது உண்மை.

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன