Book Title: Do It Today
Author: Darius Foroux
Pages: 140
Genre: Self-help / Productivity
“Do It Today” என்பது காலம் தாழ்த்தும் பழக்கத்தை (Procrastination) வெல்ல உதவும் ஒரு எளிமையான மற்றும் நடைமுறை சார்ந்த சுய முன்னேற்ற நூல். இதற்கு முன் Brian Tracy எழுதிய Eat That Frog போன்ற புத்தகங்களை வாசித்த அனுபவம் இருந்தால், இந்த நூல் இன்னும் எளிதாகப் புரியும்.
இந்த புத்தகத்தின் முக்கிய பலம் அதன் எளிமையான மொழி மற்றும் நேரடியான அணுகுமுறை. எந்தவொரு வாசகரும் சுலபமாக புரிந்து கொள்ளும் வகையில், productivity-ஐ அதிகரிப்பது எப்படி, தினசரி பழக்கங்களை எவ்வாறு மாற்றுவது, மற்றும் procrastination எவ்வாறு நம் வாழ்க்கையை பாதிக்கிறது என்பதைக் தெளிவாக விளக்குகிறது.
ஆசிரியர் பல அறிவியல் அடிப்படையிலான கருத்துகளையும் சேர்த்து, மனிதன் ஏன் வேலைகளை தள்ளிப்போடுகிறான் என்பதை விளக்குகிறார். அதே சமயம், அதை மாற்ற சிறிய ஆனால் பயனுள்ள வழிமுறைகளையும் வழங்குகிறார்.
ஆனால், நூற்றாவது பக்கத்தைத் தாண்டிய பின், முன்பு கூறிய கருத்துகள் மீண்டும் மீண்டும் வருகிறது என்ற உணர்வு ஏற்படுகிறது. இருப்பினும், அந்த மறுபடியும் கூறப்படும் முக்கியக் கருத்துகளே நம் மனதில் பதிய உதவுகின்றன.
இந்த புத்தகத்தின் சிறப்பு என்னவென்றால், இது பெரிய கோட்பாடுகளை சொல்லாமல், நடைமுறையில் உடனே பயன்படுத்தக்கூடிய சிந்தனைகளை வழங்குகிறது.
மொத்தத்தில், “Do It Today” என்பது சுய முன்னேற்றத்தை தொடங்க விரும்புபவர்களுக்கு ஒரு நல்ல ஆரம்ப புத்தகம். எளிமையான மொழி, தெளிவான கருத்துக்கள், மற்றும் செயல்படுத்தக்கூடிய வழிமுறைகள் கொண்ட இந்த நூல், அனைவரும் வாசிக்கக்கூடிய ஒரு பயனுள்ள புத்தகமாகும்.
