இதுவரை நான் இந்த மாதிரியான நாவலை எங்கும் படித்ததில்லை இருந்தும் காலத்தின் மாற்றங்களுக்குக்கேற்ப கதையின் இறுதியில் ஒரு ட்விஸ்ட் ஒன்றை எதிர்பார்த்து காத்திருக்கச்செய்கிறது.

ஒரு அழகான கிராமம் அதில் வாழ்கின்ற எளிமையான மக்கள், ஜாதி வேரூன்றி இருந்தாலும் மென்மையான மானுடம் போன்று கதையின் களத்தை கொடுத்து அசத்தியிருக்கிறார் ஆசிரியர்.

தன் தந்தையை மிகுந்து நேசிக்கும் மகனிடம், தந்தை கூறுகின்ற அந்த உண்மை நம் மனதின் ஆழத்தை அதிக படுத்தி செல்கிறது. உன் அம்மா என் மனைவி இல்லை உன் தந்தை நான் இல்லை, ரயிலில் வந்த உன்னை நாங்கள் தத்தெடுத்தோம் என கூறும் போது மகனிடமிருந்து எந்த உணர்ச்சி பிழம்பும் இல்லாமல் ஆனால் வாசிக்கும் நம் உள்ளத்தை உறையச்செய்கிறது.

பக்கங்கள் 319
வெயியீடு காலச்சுவடு (கிளாசிக் நாவல் வரிசை)

நான் இந்த புத்தகத்தை படிக்கும் முன் சில மதிப்புரைகளில் ஹென்றி என்ற கதாபாத்திரம் மட்டும் மிகை படுத்தி இருந்தது, படித்து முடித்தபின் அந்த கதையில் வரும் எல்லா பாத்திரமும் அதற்கென்ற ஓர் நிச்சே பண்பு இருந்தது.

அக்கம்மாள்க்கும் தன் தம்பியின் மனைவி கனகவள்ளியோடு இருந்த மனஸ்தாபம் அதனால் பிரிந்து சென்றப்பின், தன் அக்காவை விடுகுடுக்காமல் இருக்கும் தம்பி.

எவரிடமும் சொல்லாத கிளியம்பாளின் ஒரு தலை காதல்

சபாபதியின் நட்பு; நண்பன் இறந்த பின் அவனின் மனைவியை கைவிடாமல் வாழும் மானுடம் அந்த போர்க்கால கட்டத்திலும் தத்தெடுத்த மகனின் வளர்ப்பு முறை, தன் அண்ணனின் சொத்தை பராமரித்தல் பின் அண்ணன் பயனுக்காக விட்டுக்கொடுத்தல் அனாதையாக இருந்த பெண்ணிற்கு வசிக்க இடம் கொடுத்தல்

ஒரு பகுதியில் வரும் இரு நண்பர்களின் உரையாடல் நம் உணர்வை அழுத்துகிறது, நண்பன் தன் மனைவி எழுதிய கடிதத்தை பகிர்கின்ற போது என் மனைவி கருவுற்ற நிலையிலும் சந்தோசமாக இல்லை அவள் வேளைக்கு போக வேண்டுமென்று முடிவெடுத்த சமயத்தில் தாய்மை என மிகுந்த எரிச்சலோடு எழுதியிருந்த கடிதத்தை நினைத்து வேதனை கொள்ளும் போது, ஹென்றி, இதையேன் எதிர்மறையாக எடுத்தி கொள்கிறாய் தன கருவற்றதை தன் கணவனிடம் கடிதத்தில் எழுதும் நிலையை எண்ணி கோபத்தின் நிழல் தானிவை என்ற ஆறுதல் கூறும்போது மானுடம் தனியாக ஒட்டு மொத்த மனிதனின் எதிர்மறை உணர்வு அனைத்திற்கும் சவால் விடுகிறது

முழுமையாகப் பார்த்தால், இது மனித உறவுகளின் நுணுக்கங்களையும் வாழ்க்கையின் இனிமையான பக்கத்தையும் வெளிப்படுத்தும் ஒரு உண்மையான “feel good” நாவல். வாழ்க்கையை நேசிக்கும் ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் ஒருமுறையாவது இந்தப் புத்தகத்தை வாசிக்க வேண்டிய ஒன்று.

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன