இந்த மொழிபெயர்ப்பு நூலானது ரஷியன் எழுத்தாளர் இவான் துர்நெவ் எழுதிய பிரசித்திபெற்ற நாவல் ஆஸ்யா. இந்த நாவல் முதலில் 1857ஆம் ஆண்டு வெளிவந்தது, அக்காலத்தில் ரஷ்ய இலக்கிய உலகில் பெரும் வரவேற்பைப் பெற்ற படைப்பாகும்.

இதனை “சீமானின் திருமணம்” என்று தமிழில் மொழிபெயர்த்தவர் ந. பாஸ்கரன்.

பக்கங்கள்: 79

வெளியீடு: பரிசில்

முதல் பதிப்பு: டிசம்பர் 2025

இதன் வகை: மொழிபெயர்ப்பு அல்லது புனைவு

இந்த நாவலில் ஆசிரியர் அவர்கள் ஒரு 25 வயது பணக்கார இளைஞனின் மனநிலையும், மனிதர்களிடம் மிகுந்த நேசத்துடன் பழகும் அவனது வாழ்க்கைப் போக்கும், அவனது முதல் காதல் எப்படி நெஞ்சில் எழுந்தது என்பதையும் மிகுந்த ரசிப்புடன் விரிவாக விவரிக்கிறார். இது மிக எளிமையான காதல் கதை அல்ல, உணர்ச்சிகளின் நுண்ணிய அலைக்கழிப்புகளைப் படம் பிடித்த நாவல்.

முக்கிய அம்சங்கள் என்று பார்த்தால், எப்போதும் போல காதல் நாவல்களைப் படிக்கும் பொது நமக்கு ஒரு 10 அல்லது 15 வயது குறைந்து விட்டது போல உணர்வது வழக்கம் தான். இதே உணர்ச்சி பெருக்கமும், அந்த இளமைக் களிப்பும், இதே சம கால அனுபவமும் இந்தக் கதையிலும் கண்டிப்பாக தொடரும் என்பதே உண்மை.

தமிழாக்கம் மிகச் சிறப்பாக செய்துள்ளார் ந. பாஸ்கரன் அவர்கள். கதையில் எங்கும் தொய்வு, தடை, அல்லது மொழிச்சரிவு போன்றவை ஏற்படவில்லை. “பீர்”, “கொமார்ஸ்” போன்ற அயல் மொழி வார்த்தைகளை கூட அதற்கேற்ற வடிவில் பயன்படுத்தி வாசகர்களுக்கு புரியும் வகையில் மாற்றியுள்ளார். அதுவே நமக்கும் வாசிப்பில் இயல்பான அனுபவமாக இருப்பது மிகை இல்லை.

கதாபாத்திரங்கள் என்றால்: கதையின் நாயகன் அவனது பெயர் கதை முழுவதிலும் எங்கும் குறிப்பிடப்படவில்லை ஆனால் நாயகி ஆஸ்யா (Ana Nigalvlena) மற்றும் அவளின் சகோதரன் காகின் மட்டுமே தெளிவாக இக்கதையில் நிறைபெற்றவர்களாக இருக்கின்றனர். நாயகனின் காதலிக்கும் முன் உள்ள மனஅழுத்தமும், காதல் வயப்பட்டபின் அவனது மாற்றப்பட்ட செயற்பாடுகளும், நாயகியின் இயற்குணங்களும், சகோதரனின் செயல்களும் இணைந்து ஒரு உணர்ச்சி பெருகுக்குரிய கதையாக இது அமைந்துள்ளது .

நிறை என்று பார்த்தால், முன்பு கூறியது போல தமிழாக்கம் தெளிந்த நடையாகவும் வாசிக்கும்போது இலகுவாகவும் உள்ளது. காதல் வயப்பட்டு  தோல்வி கண்டவர்களும், பதின்ம வயதில் உள்ள ஆண்கள், பெண்கள் ஆகிய எல்லோரும் இந்தக் கதையை ஆழ்ந்து படிக்கலாம். குறிப்பாக காதல் தோல்வியைக் கையாளும் பொது தன்னை சீராக வைத்துக்கொள்வது எப்படி என்பது தற்போதைய Gen Z kids அறிந்து கொள்ள வேண்டிய விஷயம். வன்முறை, சுய தண்டனை போன்ற தவறான செயல்கள் இல்லாமல் காதலித்தவரை எப்படி மதிப்புடன் நடத்த வேண்டும் என்பதும் இந்தக் கதையின் மூலம் தெரிய வருகிறது.

இப்போது காதல் தோல்வியால் உணரப்படும் அவஸ்தை நாளை அது என்றும் நம் நினைவில் பொதிகை  மலையின் உச்சியில் உறவாடும் குளிர்ந்த காற்று போல் மனதில் தங்கும் என்ற உணர்வையும் ஆசிரியர் நம்பகமாக உருவாக்குகிறார்.

குறை என்று பார்த்தால் , இந்த புத்தகத்தின் தமிழ் தலைப்புதான். தலைப்புக்கும் நாவலின் கருவுக்கும் நேரடி சம்பந்தமில்லை, அட்டைபடமும் கொஞ்சம் வேறுபட்டதாக இருக்கலாம்.

கதையின் களம்:

நாயகன் ஜெர்மானிய இளைஞன், காதலியும் அவளது சகோதரனும் ரஷ்யர்கள். ஒரு மலை மற்றும் அதன் கீழ் ஓடும் ரயின் நதி இரு கரைகளிலும் நாயகன், நாயகி வசிக்கின்றனர். இயற்கையின் தோற்றம், காட்சி, ஒலி, காற்று அனைத்தையும் ஆசிரியர் அழகாக எழுதுவதால் நம்மையும் கற்பனை செய்யத் தூண்டுகிறது. ஆரம்பத்தில் நாயகன் மனிதர்களிடம் மட்டுமே ஆவல் என சொன்னாலும் ஆசிரியருக்கு இயற்கை மீதான காதல் மிக தெளிவாக தெரிகிறது.

ஒரு சாதாரண சூழ்நிலையில் நாயகியும் நாயகனும் சந்திக்கின்றனர், ஆனால் நாயகியின் நடத்தை ஆரம்பத்தில் நாயகனுக்கு குழப்பமாகவும் ஏமாற்றமாகவும் இருந்தது. காதலிக்கும் முன்  நாயகன், நாயகி தன்னை காதலிக்க வேண்டும் என உள்ளுக்குள் துடிக்கின்றான்; ஆனால் ஆஸ்யா காதலிக்கிறது என தெரிந்தபின் அவனது நடத்தையில் மாற்றம் ஏற்படுகின்றன. பின் காதலியை தொலைத்துவிட்டு அவளை தேடி ஊர் ஊராக அலைவது, கடிதத்திலே தேட வேண்டாம் என சொன்னாலும் மனம் விடாதது ஆகியவை மிக நிஜமாக எழுதப்பட்டுள்ளது.

நாயகன் பிற பெண்ணிடம் காதல் கொள்ள முயன்றாலும், ஆஸ்யா ஏற்படுத்திய உணர்வு அந்த அளவில் யாரிடமும் கிடைக்கவில்லை என்பதும் நிதர்சன முடிவாக உள்ளது.

இந்த காலகட்டத்தில் உள்ள பதின்ம வயது மாணவர் மாணவிகள் இக்கதையை படித்து உணர்ச்சிகளை எப்படிச் சமாளிப்பது என்று கற்றுக்கொள்ள முடியும்.

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன