பலவீனமான இதயம் என்ற கவிதைத் தொகுப்பை எழுதியவர் க்ரிஷ் பாலா (பா. பாலகிருஷ்ணன்). Gen Z தலைமுறையைச் சேர்ந்த எழுத்தாளராக இவர் தன்னை அடையாளப்படுத்துகிறார். புத்தகத்தின் அணிந்துரை மற்றும் வாழ்த்துரைகளை வாசிக்கும் போது, அவருக்கு இலக்கிய உலகில் ஒரு வலுவான ஆதரவு வட்டம் இருப்பது தெரிகிறது. மொத்தம் 66 கவிதைகள் 104 பக்கங்களில் இடம் பெற்றுள்ளன. 

குறுங்கவிதை வடிவில் அமைந்துள்ள இந்தத் தொகுப்பு, எளிய சொற்களால் ஆழமான உணர்வுகளை வெளிப்படுத்துகிறது.

இந்தக் கவிதைகளில் பல வாசித்தவுடன் மனதில் பதிந்துவிடுகின்றன. அடுத்த பக்கத்திற்குச் சென்றபோதும் மீண்டும் அதே பக்கத்தைத் திருப்பிப் படிக்கத் தூண்டும் தன்மை அவற்றுக்கு உள்ளது. மனித மனத்தின் நுணுக்கங்களை கவனித்து பதிவு செய்வதில் எழுத்தாளரின் திறமை தெளிவாகப் புலப்படுகிறது. காதல், பிரிவு, நினைவு, தனிமை, வறுமை போன்ற உணர்வுகள் இயல்பாக வெளிப்படுகின்றன.

“நான் இங்கு 

உடைந்துவிட்டது தெரியாமலேயே 

என் கண்ணாடி 

வேறொருவரிடம் சிரித்துக்கொண்டிருக்கிறது” 

என்ற வரிகள் வெளிப்படையான சிரிப்பின் பின்னாலுள்ள உடைந்த உள்ளத்தை வெளிக்கொணர்கின்றன.

“ஒரு வசந்த காலத்தில் 

அவள் பேசிய வார்த்தைகளை 

என் நினைவில் 

பத்திரப்படுத்திக் கொள்வதுமட்டும்தான்” என்ற வரிகள் நினைவுகளின் ஆழத்தையும் காதலின் மென்மையையும் உணர்த்துகின்றன.

மனிதர்கள் தங்கள் வலியை மறைத்து வெளியில் வேறு முகமூடி அணிவது எவ்வளவு சாதாரணமானதோ, அதனை இந்தச் சில வரிகள் நமக்கு நினைவூட்டுகின்றன.

ஒருவரை மீண்டும் மீண்டும் மன்னிக்கும் அன்பின் ஆழம் குறித்து எழுதிய வரிகள் மனதை நெகிழச் செய்கின்றன.

அதே நேரத்தில், சில கவிதைகள் உரைநடையை வெறும் வரி முறிப்பாக மாற்றியதுபோல் தோன்றுகின்றன. கவிதையின் கச்சிதத்தன்மை மற்றும் வடிவமைப்பு சில இடங்களில் பலவீனமடைந்துள்ளன என்ற உணர்வு வருகிறது. ஆனால், மனித மனத்தின் நுணுக்கங்களை உணர்ந்து அவற்றை நேர்மையாக பதிவு செய்யும் முயற்சி பாராட்டத்தக்கது.

மொத்தத்தில், பலவீனமான இதயம் இளம் வாசகர்களுக்குப் பெரிதும் தொடர்பு கொள்ளக்கூடிய ஒரு கவிதைத் தொகுப்பாக திகழ்கிறது. எதிர்காலத்தில் மேலும் ஆழமான படைப்புகளை வழங்கும் திறன் எழுத்தாளருக்கு உள்ளது என்பதில் சந்தேகமில்லை. 

“தரைக்கு தள்ளிவிடப்பட்ட

சருகு ஒன்று

மண்ணில் தவித்தபடி

மரத்தையே

பார்த்துக்கொண்டிருந்தது!”

“ஒரு புத்தகம் வாங்குவதற்குள்

புத்தகக் கடையிலேயே நின்று

பல பக்கங்களைப் படித்துவிடுகிறது

வறுமையின் கால்கள்.”

“இத்தனைக்கும் பிறகு

அவனால் எப்படி

இவனை

மன்னிக்க முடிகிறது

இவன்

ஆயிரம் முறை

அவளை  கோபப்படுத்தி விட்டான்

அவளும் இவனை

ஆயிரம் முறை

மன்னித்துவிட்டாள்

இதற்கு பிறகும்

இவன் ஏதோ ஒருவிதத்தில்

அவளை எரிச்சல் அடையும் படி

செய்யத்தான் போகிறான்

அவள் மீண்டும்

இவனை மன்னிக்க

தயாராகவே இருக்கின்

அதற்கு காரணம்

அவர்கள் கொண்ட

அத்து அன்பு”

இத்தொகுப்பில் காதல், பிரிவு, தனிமை, ஏமாற்றம், நம்பிக்கை, வறுமை போன்ற பல்வேறு கருக்கள் இடம் பெற்றுள்ளன. குறிப்பாக, மன்னிப்பு மற்றும் உறவுகளின் நிலைத்தன்மை குறித்து பேசும் கவிதைகள் வாசகர்களை சிந்திக்க வைக்கின்ற

வேலைக்காரி

நாடகம்

அண்ணா

96

ஆழி செஞ்சுவடிகள்

 Cult Classic நாடகம்

54 காட்சிகள் 96 பக்கங்கள்

ஒன்றே குலம் ஒருவனே தேவன்

நிறைய திரைப்படங்கள் இதன் தழுவலாக வந்திருக்கின்றன

தலைப்பு வேலைக்காரி என்றாலும் ஆனந்தன் என்ற கதாபாத்திரதிற்கு தான்

அதிக weightage என கூறலாம்

ஒரு சில காட்சிகளில் வரும் வசனங்கள் பார்க்கும் போது அன்றே பேசப்பட்ட சொல்லாடலா இன்றும் மேலோங்கி இருக்கிறு என ஆச்சர்யபட வைக்கிறது

நாடகத்தின் ஒரே கருத்தியல் ஜாதி மற்றும் பணத்தின் அதிகாரத்தில் இருந்து ஏழை எளிய மக்களை காப்பாற்றுவதே ஆகும்.

நான் இரண்டு அல்லது மூன்று முறை வாசித்தது காட்சி எண் 28 தான் அவ்ளோ கிண்டல் நக்கலாக வாக்கியமைப்பை கொடுத்திற்கிறார் ஆசிரியர். 96 பக்கங்களில். இவ்ளோ பெரிய நாடகத்தை அல்லது 54 காட்சிகளில் முடிக்க முடியும் என்றால் அது ஆசிரியர் அவர்களில் மொழி புலமை என்றே கூற வேண்டும்.

தன் தந்தையின்சாவுக்கு காரணமாக இருப்பவனை பழி வாங்க வேண்டும் என்ற எண்ணத்தை மாற்றி அதை நேர்மறையான எண்ணங்களால் சம்பந்தப்பட்டவனை திருத்தும் முயற்ச்சி மிக அருமையான

மிக அருமையான ஒரு core என்றே கூற வேண்டும்

கோயில் வரு இடங்களில் மணி என்னும் கதாபாத்திரத்தின் மூலம் பகுத்தறிவை சும்மா கேட்பவரின் தலையில் ஒரு அணி அடிப்பதுபோல் இருக்கப் பதிய வைக்கிறார்.  இதே நாடகத்தை. இன்றைய காலகட்டத்தில் திரைப்படமாக எடுத்தால்கூட அது மக்களின் மனதில் நீண்ட காலத்திற்கு இடம் புடிக்கும்

இதே core வைத்து ஏற்கனவே நிறைப் படங்கள் வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும்    

அண்ணா என்றுமே அரசியல் தத்துவங்களுக்கு முன்னோடி என்று சொன்னால் கூட சினிமா துறைக்கும் ஆசான் என்றே சொல்லலாம்

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன