புத்தகத்தின் பெயர்: கிழவனும் கடலும்
ஆசிரியர்: எர்னெஸ்ட் ஹெம்மிங்வே
பக்கங்கள்: 144

“கிழவனும் கடலும்” என்பது மனித மனவலிமையையும், வாழ்க்கையின் சவால்களை எதிர்கொள்ளும் துணிவையும் மிக எளிமையாகவும் ஆழமாகவும் எடுத்துரைக்கும் ஒரு சிறந்த படைப்பு. இது நான் வாசித்த இரண்டாவது புத்தகம். இந்த நூலைப் பற்றி முன்பே சிலர் எழுதிய மதிப்புரைகளை பார்த்திருந்ததால், ஒரு எதிர்பார்ப்புடன் தமிழில் வாங்கி வாசித்தேன். வாசித்தபின், இதை நேரடியாக ஆங்கிலத்தில் படித்திருக்கலாம் என்ற எண்ணமும் தோன்றியது, ஏனெனில் தமிழாக்கம் சில இடங்களில் அதன் மூல ஆழத்தை முழுமையாக வெளிப்படுத்தவில்லை.

இந்தக் கதையின் மையத்தில், ஒரு வயதான மீனவர் தனது வாழ்க்கை போராட்டத்தை எதிர்கொள்ளும் விதமே உள்ளது. கடலில் தனியாகச் சென்று, ஒரு பெரிய மீனை பிடிக்க போராடும் அந்த மனிதனின் மனநிலை, தன்னம்பிக்கை, மற்றும் தளராத முயற்சி ஆகியவை மிகவும் தாக்கம் செலுத்துகின்றன. வெளிப்படையாக இது ஒரு எளிய மீன்பிடி கதை போல தோன்றினாலும், அதன் உட்பொருள் மனித வாழ்க்கையின் உளவியல் பயணத்தை பிரதிபலிக்கிறது.

தோல்வி, தனிமை, நம்பிக்கை, மன உறுதி போன்ற பல உணர்வுகளை இந்த நாவல் நுட்பமாக எடுத்துக்காட்டுகிறது. குறிப்பாக, எந்த சூழ்நிலையிலும் மனம் தளராமல் முன்னேற வேண்டும் என்ற செய்தி வாசகரை ஊக்குவிக்கிறது.

மொத்தத்தில், “கிழவனும் கடலும்” ஒரு சிறிய நாவல் என்றாலும், அதில் அடங்கியுள்ள சிந்தனைகள் மிகவும் ஆழமானவை. வாழ்க்கையை வேறு கோணத்தில் பார்க்க வைக்கும், மனதைத் தூண்டும் ஒரு இன்ஸ்பிரேஷனல் படைப்பு இது.

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன