அலை உறங்கும் கடல்
ஓர் எழுத்தாளர் 12 மாதங்கள்
ஆசிரியர் சில காலம் ராமேஸ்வரம் தனது சொந்த ஊர் என்றே நினைத்திருக்க வேண்டும் என நம்புகிறேன். அவ்வளவு ஈரங்கள் உள்ளன ஒவ்வொரு கருவிலும்.
மொத்த ஊரையும் அப்போது உள்ள கால கட்டத்தில் மந்திரங்கள் மற்றும் மீன்கள் சார்ந்த ஊர் என தெளிவுபட தனது முன்னுரையிலே கொடுத்திருக்கிறார்.
செய்தி கட்டுரை எழுத ராமேஸ்வரம் சென்ற ஆசிரியர் அந்த தீவுகளில் அப்போதைய கால கட்டத்தில் நடந்திருந்த நிகழ்வுகள் அல்லது அவலங்கள் இன்னும் கூடுதலாக அந்த ஊரின் அழகியல்களைப் பற்றியும் நம் நெஞ்சங்களில் ஒரு மழை தூவாரணம் போல இக்கதையை எழுதியுள்ளார்.
அங்கே நடக்கும் அரசியல்கள், சுரண்டல்கள், மக்களின் வாழ்வாதாரம், காதல், இரு பெண் பிள்ளைகளை கொண்ட அப்பாவின் பொருளாதார நிலைமை, ஜாதியின் வேறுபாட்டால் தத்தளிக்கின்ற காதல், மீனவர்களின் ஆபத்துகள் சூழ்ந்த வாழ்க்கை முறை, பின் ராமநாத சுவாமி கோவிலில் நடக்கும் நீத்தார் சடங்குகள், அதிலுள்ள பொருளாதாரம் ஆகியவற்றை தனது மனதின் நெருக்கமாக வைத்து கொண்டு இக்கதையை எழுதியுள்ளார்.
கதையின் நடையிலே கடற்கரை மாலை பொழுது, கருவாட்டின் வாசம், அக்னி தீர்த்தங்கரை, தங்கச்சி மடம், மீன் பிடிக்கும் படகு, அகதிகளின் வாழ்க்கை, அவர்களுக்கு சென்றடைகின்ற நிவாரணத்தில் உள்ள ஊழல்கள், சில பேரின் பேராசையால் அல்லது பக்கத்து இனத்தின் மேல் உள்ள ஒரு பற்றின் காரணத்தால் நடந்தேறும் கடத்தல்கள் பற்றி அந்த மக்களின் வாழ்வாதாரத்தை மையப்படுத்தி இதனை எழுதியுள்ளார்.
எப்படி இருக்க வேண்டிய ஊர் ஆனால் எப்படி இருக்கிறது என்ற ஆதங்கமும் ஆசிரியரின் எழுத்தின் பால் தெரிய வருகிறது.
கதாபாத்திரங்கள் அப்புசாமி, உமா, ராமநாதன், ராஜு, அருள்தாஸ் போன்றோர் கவனிக்கப்பட வேண்டிய கதாபாத்திரங்கள்.
ஒரு நாவலின் இலக்கணத்தின்படி அப்புசாமி மற்றும் அருள்தாஸ் கதாபாத்திரங்கள் மீது conflicts இருக்கிறது, அவர்களே இந்த கதையை நகர்த்தி செல்கின்றனர்.
ஆசிரியர் பா. ராகவன் அவர்களின் காணொளிகளை அவ்வப்போது YouTube இல் பார்த்திருக்கிறேன் என்றாலும் கூட அவருடைய அரசியல் புரிதல் அவர் பேச்சை விட எழுத்து அதிலும் கதையோடு பின்னும் போது நமக்கு வாசிப்பதற்கு மெருகேற்றி விடுகிறது.
நெகட்டிவ்ஸ் என்னவென்றால் இந்த புத்தகத்தின் அச்சில் தான் அடுத்த அடுத்த பக்கங்களை புரட்டும் போது இரண்டு அல்லது மூன்று தாள்களும் சேர்ந்துகொள்கிறது, அவ்வளவு மென்மையாக தாள்களாக உள்ளன.
ராமேஸ்வரம் ஊரை சார்ந்து இருப்பவர்கள் அல்லது அந்த ஊரிற்கு அடிக்கடி சென்று வருபவர்கள் மீண்டும் ஒரு முக்கியமான அல்லது நமது அரசியல்வாதிகளின் ஈழ தமிழர்களின் மீது உள்ள பாசத்தை தெரிந்து கொள்ளவும் இந்த புத்தகத்தை படிப்பது ஒரு கட்டுரை போன்றதே தோன்றும்.
